[X] Close

சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:39 am
  • அ+ அ-

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களவைத் தேர்தல் வெற்றியைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுகவின் ஆரம்பகால முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்பில் தர்மலிங்கம். 1950 முதல் 1972 வரை 22 ஆண்டுகள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்துள்ள இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் வேளாண் துறை, வருவாய்த் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சொந்த ஊரான லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் அன்பில் தர்மலிங்கத்துக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அன்பிலில் நேற்று நடைபெற்ற விழாவில் சிலையைத் திறந்து வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:அன்பில் தர்மலிங்கத்தின் உழைப்பை என்றைக்கும் மறக்க முடியாது. திருச்சி மாவட்டத்தை திமுகவின் தீரர்கள் நிறைந்த மாவட்டமாக உருவாக்கி கொடுத்துள் ளார். அவர் வழிநின்று நாமும் நமது கடமையை ஆற்றுவோம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் அதைவிட மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நாம் இங்கு உறுதி ஏற்போம் என்றார்.

அதைத்தொடர்ந்து, அன்பில் தர்மலிங்கத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையிலான நூற்றாண்டு மலரை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர், எம்.பி.க்கள் திருச்சி சிவா, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நடிகர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மாநகரச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close