[X] Close

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்துள்ள நிலையில் மோடியை சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் திட்டம்: ஆதரவாளர்களுடன் தனித்தனியாக டெல்லி பயணம்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 06:52 am
  • அ+ அ-

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் ஜூன் 15-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் வரும் ஜூன் 15-ம் தேதி மாநில முதல்வர்கள் பங்கேற் கும் நிதி ஆயோக் கூட்டம் நடக் கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக அவர் வரும் ஜூன் 14-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்து வருகிறது.

அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு வரான ராஜன் செல்லப்பா, இரு தினங்களுக்கு முன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, "ஜெயலலிதாவால் அடை யாளம் காட்டப்பட்ட ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்க வேண் டும். இரட்டை தலைமை வேண் டாம், ஒற்றைத் தலைமை வேண் டும்" என்று தெரிவித்தார். இதை யொட்டி குன்னம் எம்எல்ஏ ராமச் சந்திரனும் இதே கருத்தை வலி யுறுத்தினார். ஏற்கெனவே மக்க ளவைத் தேர்தலில் தோல்வி யடைந்துள்ள நிலையில், அந்த தோல்வியை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்த கருத்து அதிமுக வில் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது. பொதுக்குழுக் கூட்டம் நடந்தால் அதில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்பின், நேற்று முன்தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப் பாளர் முதல்வர் பழனி சாமி ஆகியோர் கட்சி விவகாரங் களை பொது வெளியில் பேசக் கூடாது என்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர்.

நாளை ஆலோசனை

இதற்கிடையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மத்தியில் தற்போது கருத்தொற்றுமை இல் லாததும், கட்டுப்பாடின்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளதாலும் இதுபோன்ற சிக்கல்கள் வந்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக நாளை சென்னையில் நடக்கும் மாவட் டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக் கப்படும் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத் துக்கு முதல்வர் பழனிசாமி செல் லும்போது மூத்த அமைச்சர்கள் சிலரும் உடன் செல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி செல்கிறார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்ட நிர்வாகிகளும் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இரு தரப்பினரும் தனித்தனியாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கலாம் என்றும் கூறப்படு கிறது. முதல்வரை பொறுத்தவரை, பிரதமரை சந்தித்து தமிழக திட்டத்துக்கான கோரிக்கை மனுக்களை அளிக்க முடிவெடுத் துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close