[X] Close

யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல: ஆளுநர் கிரண்பேடி


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 12:14 pm
  • அ+ அ-

யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. புதுச்சேரிக்கு சேவை செய்வது மட்டுமே எனது எண்ணம் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது 70-வது பிறந்த நாள் விழாவை ஆளுநர் மாளிகையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கேக் வெட்டி நேற்று கொண்டாடினார். தலைமைச் செயலர் அஸ்வனி குமார், டிஜிபி சுந்தரி நந்தா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அப்போது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூடை நிறைய இருந்த மலர் களை கிரண்பேடி மீது கொட்டி வாழ்த்து தெரிவித்தனர். அம்மலர் களை கிரண்பேடி எடுத்து மீண்டும் அவர்கள் மீதும் தூவி மகிழ்ச்சி யடைந்தார்.

காங். எம்எல்ஏ வாழ்த்து

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச் சர்கள் யாரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆளுநர் மாளி கைக்கு நேற்று நேரில் சென்று கிரண் பேடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்

பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "யாரையும் புண் படுத்துவது எனது நோக்கமல்ல. புதுச்சேரிக்கு சேவை செய்வதே எனது எண்ணம். மக்களின் வரிப் பணம் மக்களுக்கு நேரிடையாக முழுமையாக சென்றடைய வேண்டும். அதுவே என் நோக்கம்.

புதுச்சேரியை பசுமையாகவும், நீர் நிறைந்த மாநிலமாக மாற்ற வேண்டும். இதற்கு என்னோடு இணைந்து செயல்படுங்கள். புதுச்சேரியில் எத்தனை ஆண்டு கள், மாதங்கள், நாட்கள் இனி இருப்பேன் என்று தெரியாது. இனி இருக்கும் நாட்களில் புதுச்சேரியை பசுமையாக மாற்ற தொடர்ந்து செயல்படுவேன். ஒவ்வொரு வாரமும் என்னோடு கலந்து கொண்டு மரங்களை நடலாம்’’ என்றார்.

முன்னதாக அவர் கனகன் ஏரிக்கு சென்றார். ஏரிக்கரையில் தன் னார்வலர்கள், பொதுமக்க ளுடன் அவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். தொடர்ந்து ஏரிக்கரையில் மரக் கன்றுகளை நட்டார். இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் கூறியிருப்பதாவது:

எனது 70-வது பிறந்த நாளின் ஒரு பகுதியாக பசுமை புதுச்சேரி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சே ரியை பசுமையானதாக மாற்ற, வரும் வார இறுதி நாட்கள் ஆய் வினை மரம் நடுவதில் சமர்ப்பிக்க உள்ளேன். இது 219-வது வார ஆய்வு பணியாகும் என தெரிவித் துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close