[X] Close

தொண்டர்களின் கருத்துகளை கேட்டு கட்சித் தலைமை முடிவெடுக்கும்: அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தகவல்


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:03 am
  • அ+ அ-

அதிமுக ஆட்சி, கட்சியில் பிரச்சினைகள் இல்லை. கட்சியில் அனைவரின் கருத்துகளையும் கேட்டு, அதனை பரிசீலித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என அதிமுக அமைப்புச் செயலாளரும், எம்எல்ஏவுமான செம்மலை கூறினார். முதல்வர் பழனிசாமி தலைமையில் சேலத்தில் நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவைப் பொறுத்தவரை இது மக்கள் இயக்கம். இதில்உள்ள தொண்டர்கள் ஒவ்வொரு வருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. இந்த உரிமையை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கொடுத்து இருக்கிறார்கள்.

கட்சியில் அனைவரின் கருத்துகளை யும் கேட்டு, அதனை பரிசீலித்துகட்சியின் தலைமை முடிவெடுக் கும். கட்சியில் குழப்பமோ கோஷ் டிகளோ எதுவும் கிடையாது. கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். முதல்வர் பழனிசாமி தமிழ கத்தில் சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசித்து கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளால் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் சற்று நிலை குலைந்துள்ளோம். எனவே, சுதாரித்துச் செல்வதற்கு நிதானம் தேவை. அந்த நிதானத்தை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டும், மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே, திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், இப்போது நடைபெறும் ஆட்சியின் செயல்பாடும், கட்சியின் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆட்சியிலோ, கட்சியிலோ எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close