[X] Close

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் மீது ஹெல்மெட் அணியாததற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் கேள்வி


  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 09:41 am
  • அ+ அ-

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற அரசியல் கட்சியினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காதது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலின்போது வேட்பாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், இருசக்கர வாகனங்களில் தங்கள் கட்சியின் கொடிகளை கட்டிக்கொண்டு சாலை களில் மக்களை அச்சுறுத்தும் வகையில், வாகனங்களை இயக்கினர்.

பிரச்சார வாகனத்தின் முன்னும், பின்னும் அணி வகுத்து இருசக்கர வாகனங்களை இயக்கிய நபர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற நபர்கள் யாரும் ஹெல்மெட் அணியவில்லை. கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபர்களை, போலீஸார் வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ‘இந்து தமிழ்' நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. ஆனாலும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் கூறியதாவது:ஹெல்மெட் அணிவது தொடர்பான வழக்கு விசாரணையில், ஹெல்மெட் அணியாத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,தேர்தலின்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, பத்திரிகைகளில் சுட்டிக்காட்டிய போதும் காவல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அரசியல் கட்சியினருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டதா?தற்போது ஹெல்மெட் வழக்கு விசாரணையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகு, மீண்டும் சாதாரண மக்கள் மட்டும் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி வழக்குப் பதிவது மற்றும் அபராதம் வசூலிப்பது போன்ற செயல்களில் போலீஸார் ஈடுபடுவது மக்களின் நம்பிக்கையை குலைப்பதாக உள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து மாவட்ட காவல் துறையினர் விளக்க வேண்டும் என்றனர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close