[X] Close
 

பாம்பன் பாலத்தில் நின்றுகொண்டே பைக் ஓட்டிய பெண்: நூதன விழிப்புணர்வு


pamban-bridge-awareness-bike-ride

பாம்பன் பாலத்தில் நின்று கொண்டே பைக் ஓட்டிய சைதி மேத்யூ.

  • kamadenu
  • Posted: 12 Jun, 2018 12:10 pm
  • அ+ அ-

இயற்கையையும், பெண்மையையும் காப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி நின்றவாறு மோட்டார் சைக்கிள் ஓட்டும் பெண் நேற்று பாம்பன் பாலம் வந்தார். 

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தாமஸ் என்பவர் மனைவி சைதிமேத்யூ (45). டெய்லராக பணிபுரிகிறார். இவருக்கு பள்ளி, கல்லூரியில் படிக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சைதி மேத்யூ தொடர்ந்து 250 கி.மீ நின்று கொண்டே பைக் ஓட்டி சாதனை படைத்தார். இவரின் இந்த சாதனை யூ.ஆர்.எப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து சமுதாய நலன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. அதனால் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஊட்டி முதல் சென்னை வரை நின்று கொண்டே மூவாயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் சாதனையை கடந்த ஜுன் 6-ம் தேதி தொடங்கினார்.

இவரின் பயணம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக திங்கட்கிழமை பாம்பன் பாலம் வந்தடைந்தார். 

அவர் கூறுகையில், சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான இந்த பயணத்தின் வாயிலாக இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர் குழுக்களை ஒன்றிணைத்து தொடர்ந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்



MGR - Kindle Edition


[X] Close