[X] Close

கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து மனு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 10:45 am
  • அ+ அ-

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இயக்குநராகப் பதவி வகித்த ‘அட்வான்டேஜ் ஸ்டேட்டஜிக்’ நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள் ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற்றுக் கொடுத்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் இயக்குநராகப் பதவி வகித்தசென்னையில் உள்ள ‘அட்வான்டேஜ் ஸ்டேட்டஜிக் கன்சல்டிங் சர்வீசஸ்’ நிறுவனம் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித் துறையினரும் அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து இந்தியா, லண்டன், ஸ்பெயினில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது. அதேபோல அவர் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் நிறுவனத்தின் ரூ.90 லட்சம் நிரந்தர வைப்பீட்டுத் தொகைக்கான வங்கிக் கணக்குகளும் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து அட்வான்டேஜ் நிறுவனம் சார்பில் உயர் நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி புஷ்பாசத்யநாராயணா முன்பு நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘இதுதொடர் பாக மனுதாரர், நிறுவனம் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பா யத்தை நாடாமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாட முடியாது’’ எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close