[X] Close

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம்


  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:24 am
  • அ+ அ-

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில் முக்கிய கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தும்படி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. கோயிலில் உள்ள ஆண்டாள் சந்நிதியில் நேற்று காலை 9 மணி அளவில் கலசகும்பம் வைக்கப்பட்டு ‘மகா சாந்தி யக்ஞம்’ என்ற சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பெரிய முறை பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில் 10 ஆச்சாரியார்கள் யாக வேள்வியை நடத்தினர். காலை 11.30 மணிக்கு சிறப்பு ஹோமம் முடிவடைந்தது. அதன் பிறகு கும்பம் எழுந்தருளச் செய்யப்பட்டு ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் 36 கால் மண்டபத்தில், ‘ஆழி மழைக் கண்ணா’ என்ற ஆண்டாள் பாசுரம் 108 முறைபாடப்பட்டது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close