[X] Close

நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்த தையல் தொழிலாளி மகளின் படிப்பு செலவை தமிழிசை ஏற்பு


605

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:06 am
  • அ+ அ-

நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்த தையல் தொழிலாளி மகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி பன்னீர்செல்வம். இவரது மனைவி பவானி. இவர்களின் மகள் ஜீவிதா. அனகாபுத்தூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்த ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை’ என்ற தலைப்பில் வெளியானது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் சாதித்த ஜீவிதாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான இந்த செய்தியை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை அனகாபுத்தூர் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி ‘‘மாணவியின் மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும். மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்று பதிவு செய்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close