[X] Close

குரூப்-4 தேர்வு அறிவிப்பு: ஜூன் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


4-14

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 07:53 am
  • அ+ அ-

ஒரேநாளில் 7 போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. அதில், 4 தேர்வுகளின் முடிவுகள் ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறஉள்ள தேர்வுக்கு ஜூன் 14 முதல்ஜூலை 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜனவரி 27-ம் தேதிநடைபெற்ற இளநிலை கூட்டுறவுஆய்வாளர் தேர்வு, மார்ச் 2-ல்நடந்த தொழில் மற்றும் வணிகத்துறை விலை மதிப்பீட்டு உதவியாளர் தேர்வு, ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சித்துறை விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன் மே 4-ம் தேதி நடந்த மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வு, மே 5-ல் நடைபெற்ற கருவூலம் மற்றும் கணக்குத் துறை கணக்கு அலுவலர் தேர்வு, அதே நாளில் நடத்தப்பட்ட தொழில் வணிகத்துறை வேதியியலர் தேர்வு மற்றும் சமூகப்பாதுகாப்புத் துறை உதவி கண்காணிப்பாளர் தேர்வு ஆகிய 7 போட்டித்தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை ஒரேநாளில் வெளியிட்டது. இதில் 4 தேர்வுகளின் முடிவுகள் ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தேர்வுகளில் அடுத்தநிலைகளான சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் நேர்காணலுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வுஇதற்கிடையே, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதன்படி, குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்குஜூன் 14 முதல் ஜூலை 14 வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிக்கை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close