[X] Close

ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்த 1600-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.75 லட்சம் அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே நடவடிக்கை


1600-3-75

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:26 am
  • அ+ அ-

கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்ததாக 1600-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.3.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 6,853 ரயில் நிலையங்களில் சராசரியாக தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரிப்பதால், ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தூய்மையாக வைத்திருப்பது ரயில்வே துறைக்கு சவாலாக இருக்கிறது. இருப்பினும், பயணிகள் நலச்சங்கங்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் தூய்மைப் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

64 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற ஏ-1 தர நிலையங்கள் 8, கூடுதல் பராமரிப்பு தேவைப்படும் ஏ - தர நிலையங்கள் 42, பி - தரத்தில் 26, சி - தரத்தில் 75, எஃப் வரை உள்ள மற்ற தரங்களில் 584 என மொத்தம் 735 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஏ-1 நிலையங்கள் - 6, எ - நிலையங்கள் - 35, சி - தர நிலையங்கள் - 23 என மொத்தம் 64 நிலையங்களை ரயில்வேயின் மருத்துவத் துறை பராமரிக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுப்புற வீட்டு பராமரிப்புத் திட்டத்தில் ஏ-1 தர நிலையங்கள் இரண்டும், எ - தர நிலையங்கள் ஏழும் சோதனை முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 31 நிலையங்களை வர்த்தகத் துறையும், 630 நிலையங்களை போக்குவரத்துத் துறையும் பராமரிக்கின்றன. மேலும், தெற்கு ரயில்வேயில் அதிநவீன கருவிகள் உதவியுடன் மொத்தம் 2,044 ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் பணிகளை மெக்கானிக்கல் துறை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, ரயில்கள், ரயில் நிலையங்களை அசுத்தம் செய்வோரிடமிருந்து ரயில்வே துறை அபராதம் வசூலிக்கிறது. அதன்படி, கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசிய 1600-க்கும் மேற்பட்ட பயணிகளிடமிருந்து ரூ.3.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஆர்இயு துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், ‘‘ரயில்வேயின் பல்வேறு துறைகளிடம் கூடுதலாக துப்பரவு மற்றும் தூய்மைப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தந்தத் துறைகளின்அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகிறார்கள்.

தனித்துறை முழுநேரமும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ரயில்வேக்கு இருக்கிறது. எனவே, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் தூய்மை மேம்பாட்டுக்குத் தனியாக ஒரு துறையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close