அன்பில் மகேஷ்க்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல்: உறுதிப்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எச்1 என்1 வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சல் உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் எச்1 என்1 வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்," பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார் "என தெரிவித்தார்.

x