[X] Close

தமிழ் மக்களின் உண்மையான தலைவர்: கருணாநிதிக்கு ராகுல் புகழாரம்


  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 15:07 pm
  • அ+ அ-

தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 3) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் மட்டுமின்றி, கருணாநிதி மீது அன்பு கொண்ட பலரும், அவரைப் பற்றிய நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், " கருணாநிதியின் பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்வோம். போற்றத்தக்க தமிழ் மக்களின் உண்மையான தலைவர். அவரின் நினைவுகள் என்றும் மறையாது"  என்று தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் அஞ்சலி

இதே போல காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரமும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். அவரின் ட்விட்டர் பக்கத்தில், " கலைஞரின் 96-வது பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் போது என் மனதிலே தோன்றும் எண்ணம்: 'போராட்டங்கள் எப்பொழுதும் ஓய்வதில்லை'.

இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை" என்று பதிவிட்டுள்ளார்.

திமுக முன்னாள் தலைவரான கருணாநிதி, 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருக்குவளையில் பிறந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close