[X] Close

சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மத நல்லிணக்க இப்தார்: ஏராளமானோர் பங்கேற்பு


  • kamadenu
  • Posted: 02 Jun, 2019 11:36 am
  • அ+ அ-

சௌத் இன்டியன் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி வளாகத்தில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று (01.06.19) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ், ஐ டி சி ஆர் லயோலா இயக்குனர் டாக்டர் மரிய அருள் ராஜா,  ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த சுவாமி சுரஜித்தானந்தா, ஸ்ரீவிஷ்ணு மோகன் பவுண்டேஷனைச் சேர்ந்த சுவாமி ஶ்ரீ ஹரிபிரசாத், அஞ்சுமன் ஹிமாயத் ஏ இஸ்லாம் அமைப்பை சார்ந்த ஹபீப் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

d6470548-48e6-4b68-81c9-417128d9a9bc.jfif 

மும்மதங்களின் இறைவணக்க பாடல்களோடு தொடங்கிய நிகழ்ச்சியில் எஸ் ஐ டிரஸ்ட் செயலாளர் பைசூர் ரஹ்மான் தொடக்க உரை ஆற்றினார்.

8c61f39f-fe1a-49a0-b2c1-caa42672262d.jfif

அவரை தொடர்ந்து அமெரிக்க தூதர் ராபர்ட் பர்ஹெஸ், ஹபீப் உசேன், பாதிரியார் மரிய அருள் ராஜா, சுவாமி ஶ்ரீ ஹரிபிரசாத், சுவாமி சுரஜித்தானந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

இப்தார் நேரம் வந்ததும் இஸ்லாமிய பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

6e4d62ef-672d-4f24-b2d0-518285dac23e.jfif

பின்னர் இப்தார் நிகழ்ச்சி நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி சாப்பிட்டார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close