[X] Close

5 ஆண்டுகள் வேகமாக கடந்துவிடும்; அடுத்த பிரதமர் ராகுல் தான்: திருநாவுக்கரசர் நம்பிக்கை


5

  • kamadenu
  • Posted: 27 May, 2019 13:01 pm
  • அ+ அ-

5 ஆண்டுகள் வேகமாக கடந்துவிடும் எனவும், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி தான் என்றும், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "ராகுல்காந்தி மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல்காந்தி தான் தலைவராக நீடிக்க வேண்டும். நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸின் கோடிக்கணக்கான தொண்டர்கள், நாட்டு மக்களின் விருப்பம் அதுதான்.

ஒரு தேர்தலில் ஏற்படும் வெற்றியோ தோல்வியோ, ஒரு தலைவரின் செல்வாக்கையோ எதிர்காலத்தையோ தீர்மானித்து விடாது. இந்த தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு எப்படி ராகுல்காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியும்? நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மாற்றங்கள் செய்ய வேண்டும் என ராகுல்காந்தி விரும்புகிறார். அதற்கான அதிகாரத்தை செயற்குழு அவருக்கு கொடுத்திருக்கிறது.

அவருக்கு வயதிருக்கிறது. மன்மோகன் சிங் இருக்கும்போது 5 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பிரதமராக வந்திருக்கலாம். மன்மோகன்சிங் பிரதமர் பதவியை தருவதற்கு தயாராக இருந்தார். பிரதமராவது தான் வாழ்க்கை லட்சியம் என அவர் நினைத்திருந்தால் அவர் எப்போதோ பிரதமராகியிருப்பார்.

இந்த ஐந்தாண்டுகள் வேகமாக சென்றுவிடும். அடுத்த பிரதமர் நிச்சயமாக ராகுல்காந்தி தான். நாங்கள் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.அவருக்காகவும், கட்சியை பலப்படுத்தவும் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம்", என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close