[X] Close

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் ரஜினி


  • kamadenu
  • Posted: 27 May, 2019 12:56 pm
  • அ+ அ-

வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்கிறார்.

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், வருகிற 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது பாஜக.

கடந்த முறை பிரதமர் மோடி பதவியேற்றபோது, ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.  இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நட்பு ரீதியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அழைப்பை ஏற்று ரஜினி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் ‘தர்பார்’ படத்தின் ஷூட்டிங், மும்பையில் நடைபெற்று வந்தது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக நாளை (மே 28) சென்னையில் இருந்து மும்பை செல்லும் ரஜினி, அங்கிருந்து பதவியேற்பு விழாவுக்குச் செல்ல இருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, “மரியாதைக்குரிய அன்பு நரேந்திர மோடி அவர்களே, மனமார்ந்த வாழ்த்துகள். சாதித்துவிட்டீர்கள்... இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close