[X] Close

என் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை:திருமாவளவன்


  • kamadenu
  • Posted: 26 May, 2019 18:04 pm
  • அ+ அ-

வித்தியாசத்தின் அளவை சாதிவெறி, மதவெறி சக்திகளால் குறைக்க முடிந்ததே தவிர, என் வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

விசிக தலைவர் திருமாவளவம், பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்திகள் கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

''தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்த தலைமை மாணாக்கர்கள் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம். தந்தை பெரியாரின் கொள்கைகளில் குறிப்பாக சாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண் விடுதலை, மாநில உரிமைகள், மொழிப் பாதுகாப்பு, இன நலன் ஆகியவற்றை முன்னிறுத்தி அகில இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரு புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்த இயக்கம் திராவிடர் கழகம்.

அதன் அடிப்படையில் அந்தப் பாசறையில் வளர்ந்து அரசியல் ரீதியாக செழுமைப்படுத்தி, வலிமைப்படுத்தி தமிழகத்தை பிற மாநிலங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, பக்குவப்படுத்தப்பட்ட, பண்பட்ட மாநிலமாக மாற்றிய பெருமை அண்ணாவையும், தலைவர் கருணாநிதியையும் சாரும்.

அந்த மகத்தான தலைவர்கள் கட்டிக்காத்த சமூக நீதிக் கொள்கை, மதச்சார்பின்மை கொள்கை இன்றும் உயிர்ப்புடன் தமிழகத்தில் வலுவாக இருப்பதால்தான், இந்த இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பின்னரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஸ்டாலின் தலைமையில் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளாது. இந்த வெற்றிக்கு நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் பின்னணியாக உள்ளது. அதனால் தான் இங்கே மதவெறியர்கள், சாதி வெறியர்களால் காலூன்ற முடியவில்லை.

கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் மத வெறியர்களால் காலூன்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்திய தேசமே இன்றைக்கு மதவெறி சக்திகளின் கைகளில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகக்கூடிய வகையில் சிக்கிக் கிடக்கும் சூழலில், தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் ஜனநாயகத்தை, மதச் சார்பின்மையைப் பாதுகாக்க தலைமை கொடுக்கக்கூடிய இடத்தைப் பெற்றுள்ளது.

திமுகவை அழித்துவிட்டால் சமூக நீதியை அழித்துவிட முடியும், விளிம்பு நிலை மக்கள் எழுச்சி பெற முடியாது, சாதி ஒழிப்பு அரசியல் பேச முடியாது என்று கனவு கண்டார்கள். அந்தக் கனவில் மண் விழக்கூடிய வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிகரமான ஒரு கூட்டணியை அமைத்து வைத்த குறி தப்பாது என்று சொல்லும் வகையில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போயிருப்பார்.

சிதம்பரம் தொகுதியில் சாதி வெறி சக்திகளும், மதவெறி சக்திகளும் கூட்டு சேர்ந்து எப்படியாவது என் வெற்றியைத் தடுத்துவிட வேண்டும் என்று பகீரத முயற்சி மேற்கொண்டாலும் கூட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தொகுதியில், 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. வித்தியாசத்தின் அளவை அவர்களால் குறைக்க முடிந்ததே தவிர, வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

சாதிவெறி, மதவெறி, சனாதன சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை''.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close