[X] Close

திமுக மக்களவை தலைவர் தேர்வு: ஸ்டாலின் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு


  • kamadenu
  • Posted: 25 May, 2019 19:23 pm
  • அ+ அ-

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. திமுக தனியாக போட்டியிட்ட 23 தொகுதிகள் அத்தனையிலும் வெற்றிப்பெற்றது.

திமுக கூட்டணியில் முக்கிய பிரமுகர்களான கனிமொழி, அ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் வென்றனர்.

தேர்வு செய்யப்பட்ட அனைவரும் சென்னை வந்து ஸ்டாலினிடமும் கூட்டணிக் கட்சித்தலைவர்களிடமும் ஆசிப்பெற்றனர். மூன்றாவது பெரியக்கட்சியாக இந்தியாவில் திமுக தலையெடுத்துள்ளது.

23 எம்பிக்களை கொண்ட திமுகவுக்கு மக்களவை தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய எம்பிக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இந்தக்கூட்டத்தில் கூட்டத்தில், மக்களவை திமுக குழுத் தலைவராக டி.ஆர். பாலுவும், குழுத் துணைத் தலைவராக கனிமொழியும், கொறடாவாக ஆ.ராசாவும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close