[X] Close

பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது ஏன்? - பதில் சொல்லாமல் நழுவிய ராமதாஸ்


7

  • kamadenu
  • Posted: 25 May, 2019 11:50 am
  • அ+ அ-

பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறித்த கேள்விக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பதிலளிக்கவில்லை.

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் ஜெ.குருவின் சிலைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "குரு மறைந்து ஓராண்டு நிறைவடைகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம். காடுவெட்டியில் நினைவு மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் - ஜூலை மாதத்திற்குள் திறப்பு விழா நடைபெறும். 75% வேலைகள் நிறைவடைந்துவிட்டன." எனத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய ராமதாஸ், "மிகப்பெரும்பான்மையான அளவில் இந்திய மக்கள் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். வரலாறு காணாத மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். இரண்டாவது முறையாக பிரதமராகும் அவருக்கு பாமக சார்பாக வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளிக்காமல் ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர்.

ராமதாஸ் கூலிங் கிளாஸ் அணிந்து இதுவரை பொது வெளியில் வந்ததில்லை. இப்போது என்ன புதிதாய் என கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, சமீபத்தில் அவரின் 2 கண்களிலும் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. கண்கள் பிரகாசமான ஒளியை எதிர்கொள்ளகூடாது என்பதற்காக கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார் என்றனர்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close