[X] Close

பொய் பிரச்சாரத்தால் திமுக வெற்றி: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து


  • kamadenu
  • Posted: 25 May, 2019 10:26 am
  • அ+ அ-

திமுக கூட்டணிக் கட்சியினர் பொய் பிரச்சாரம் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரி வித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் மோடி ஆள வேண்டும். தமிழகத்தில் பழனிசாமி ஆள வேண்டும் என்று மக்கள் மிகத் தெளிவாக முடிவெடுத்துள்ளார்கள். திமுக கூட்டணிக் கட்சியினர் பொய் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெற்றுள்ளார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி உண்மையானதாகக் கருத முடியாது. அதிமுக ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் புழுதிவாரித் தூற்றியதால் நடுநிலையாளர் களின் வாக்குகளை தந்திரமாக கைப்பற்றியுள்ளனர். அடுத்து வரும் தேர்தலில் இந்த பின் னடைவை படிக்கட்டாகப் பயன்படுத்தி வெற்றி பெறு வோம். அதிமுகவை அழிப்போம் என்று எங்களை எதிர்த்த அமமுகவினர் போனியாகாததால் அதிமுகவில் இணைவார்கள். திமுக பெற்ற வெற்றியால் தமிழகத்துக்கு லாபம் கிடையாது என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close