[X] Close

13 எம்.எல்.ஏக்களை திமுக வென்றதால் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்கும்


13

  • kamadenu
  • Posted: 24 May, 2019 21:55 pm
  • அ+ அ-

மக்களவை தேர்தலில் திமுக கூடுதலாக பெற்ற 13 சட்டமன்ற தொகுதிகள் காரணமாக மாநிலங்கவையில் கூடுதல் எம்.பி ஒருவரை நியமிக்கும் வாய்ப்பு திமுகவுக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த 17 வது மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக அதிமுக மோதிய 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 234 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய தமிழக சட்டமன்றத்தில் அதிமுக 123 தொகுதிகளும், திமுக கூட்டணியுடன் சேர்த்து 110 தொகுதிகளும், டிடிவி தினகரன் ஒரு தொகுதியும் வைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் திமுக கூட்டணியுடன் சேர்த்து 98 தொகுதிகளும், அதிமுக 136 தொகுதிகளையும் வைத்திருந்தது. இதில் தமிழகத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் கோட்டாவுக்கான 6 எம்பிக்களில் 3 ஐ எளிதாக தேர்வு செய்யும் வாய்ப்பை அதிமுக பெற்றிருந்தது. திமுக 2 எம்பிக்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்கிற நிலைக்கு ஆளானது.

6 வது மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்வது இழுபறியில் இருந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம், 2 எம்.எல்.ஏ மறைவு, ஒருவர் தகுதி இழப்பு காரணமாக அதிமுக எண்ணிக்கை 114 ஆக குறைந்தது.

காலியான 22 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்மூலம் திமுக 13 எம்.எல்.ஏக்களை பெற்றது. இதன்மூலம் திமுக கூட்டணியுடன் சேர்ந்து 110 தொகுதிகளை பெற்றுள்ளது. அதிமுக வீணாக வாய்ப்பை இழந்துள்ளது.

இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர் கோட்டாவில் திமுகவுக்கு ஏற்கெனவே இருந்த 2 எண்ணிக்கையுடன் கூடுதலாக 1 எண்ணிக்கை கூடியுள்ளது. இதன்மூலம் இழுபறியின்றி அதிமுக, திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்யலாம்.

தமிழகத்தில் அடுத்த மாதம் கனிமொழி, டி.ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட 6 எம்பிக்கள் பதவி முடியும் நிலையில் புதிதாக  தேர்வு செய்ய உள்ள நிலையில் திமுக சார்பில் தனக்கு கிடைக்கும் 3 எம்பிக்களுக்கான தேர்வில் ஏற்கெனவே வாக்களித்தப்படி வைகோவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

மற்றொரு எம்பியாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸுக்கு அளித்ததுபோக மீதமுள்ள ஒரு எம்பி யாருக்கு என்பது கேள்விக்குறி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close