[X] Close

ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 24 May, 2019 16:53 pm
  • அ+ அ-

திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் நேற்று எண்ணப்பட்டன. தேசிய அளவில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. தேசிய அளவில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியைக் கூட பாஜக பெறவில்லை.

தமிழகம், புதுவையில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றார். 37 தொகுதிகளைப் பிடித்த திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது என திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் சனிக்கிழமை (மே 25) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close