[X] Close

மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்: பீனிக்ஸ் பறவை போல் எழுவோம்: டிடிவி தினகரன்


  • kamadenu
  • Posted: 23 May, 2019 20:37 pm
  • அ+ அ-

தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம், பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கத் தொடர்ந்து பாடுபடுவோம் என தேர்தல் முடிவு குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரனின் ட்விட்டர் பதிவு:

''மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்.

தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கட்சி உடன்பிறப்புகளுக்கும், கட்சிக்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

'அம்மா' கற்றுத்தந்த துணிவோடு, பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கத் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.

மக்களைத் துச்சமாக நினைத்து ஆட்டம் போட்ட ஆட்சியாளர்களுக்கு சரித்திரத்தில் கிடைத்த தண்டனைகளை இந்த எதேச்சதிகாரிகள் மறந்துவிடக்கூடாது.

மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது''.

இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close