[X] Close

இழப்பு யாருக்கு ? காலம் பதில் சொல்லும்? - கிண்டல் செய்தவரை சாடிய தமிழிசை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 18:57 pm
  • அ+ அ-

இழப்பு யாருக்கு என்பதை காலம் பதில் சொல்லும் என்று தூத்துக்குடி தொகுதி முடிவுகள் குறித்து கிண்டல் செய்தவருக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்தியளவில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட்டார். இதில் கனிமொழி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இதன் மூலம் தமிழிசை தோல்வியடைந்தது உறுதியாகியுள்ளது.

இதனைக் கிண்டல் செய்யும் விதமாக தமிழிசையின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு, “தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை தூத்துக்குடி_உப்பு” என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை “உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு இதயநோய் வரும் உங்கள் குடும்படாக்டரை கேட்டால் உண்மை புரியும் ?இழப்பு. யாருக்கு ? காலம் பதில் சொல்லும்?” என்று தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close