மயிரிழையில் உயிர் தப்பிய இம்ரான்கான்: தீப்பிடித்து எரிந்த பாதுகாப்பு வாகனம்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாதுகாப்பு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிடிஐ கட்சி தலைவர் இம்ரான் கான் பேரணி பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு நேற்று நள்ளிரவு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனத்திற்கு முன்பு சென்ற பாதுகாப்பு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பின்னால் வந்த இம்ரான் கான் வாகனம் சட்டென நிறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் தீப்பிடித்த வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட வாகனம் இம்ரான் கானின் தனிப்பட்ட பாதுகாப்பு வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கார் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

x