[X] Close

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு


  • kamadenu
  • Posted: 23 May, 2019 12:27 pm
  • அ+ அ-

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. இதில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

தற்போதைய  (12 மணி) நிலவரப்படி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 65,912 வாக்குகளோடு முன்னிலை வகிக்கிறார். திமுக கூட்டணிக் கட்சியாக விசிகவின் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 60,718 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தேனி, சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close