[X] Close

மதுரையில் சு.வெங்கடேசன் முன்னிலை; ராஜ் சத்யன் பின்னடைவு


  • kamadenu
  • Posted: 23 May, 2019 11:14 am
  • அ+ அ-

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இதில், மதுரை மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை விட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்.

முதல் சுற்று நிலவரப்படி, சு.வெங்கடேசன் 8,489 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ராஜ்சத்யன் 6,067 வாக்குகளே பெற்றுள்ளார்.

மதுரை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி நான்காவது இடத்திலும் உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close