[X] Close

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவன் முன்னிலை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 09:39 am
  • அ+ அ-

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தொல்.திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் பானைச் சின்னத்தில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் பொ.சந்திரசேகர் போட்டியிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, தொல்.திருமாவளவன் 20,867 வாக்குகள் பெற்று, முன்னிலை வகித்துள்ளார். அதிமுக பொ.சந்திரசேகர் 20,686 வாக்குகள் பெற்றுள்ளார். சுமார் 181 வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close