[X] Close

தென்சென்னை மக்களவை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 09:03 am
  • அ+ அ-

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் 4500 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளரான ஜெயவர்தன் 2220 வாக்குகள் பெற்றுள்ளார்.

தபால் எண்ணிக்கையில் தமிழச்சி தங்கபாண்டியன் 2280 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close