[X] Close

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி முன்னிலை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:47 am
  • அ+ அ-

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை மக்களிடம் கூறி கனிமொழி அத்தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close