[X] Close

கருத்துக் கணிப்புகள்: பல சிறிய கட்சிகளை மிரட்டி பாஜக கூட்டணியிடம் வரவழைப்பதுதான் நோக்கம்; கி.வீரமணி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 13:38 pm
  • அ+ அ-

பல சிறிய கட்சிகளை மிரட்டி பாஜக கூட்டணியிடம் வரவழைக்கவே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த திங்கள்கிழமை அன்று செய்தித்தாள்களில், தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு என்பது பாஜகவால் - ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட ஏற்பாடு என்பது, தற்போது வெளிவரும் பல்வேறு செய்திகள் மூலம் புரிய வருகிறது.

குடியரசு துணைத் தலைவரே மாறுபடுகிறார்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூட அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதை அவர் கூறிய கருத்து மூலம் எவரும் எளிதில் புரிந்து தெளிவடையலாம்.

"கருத்துக் கணிப்பெல்லாம் சரியாக வந்ததே இல்லை, அது வெறும் யூகம்தான்; அதை நம்பிடத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.

இத்தகைய கருத்துக் கணிப்புகளின் உள்நோக்கம்:

1. பல சிறிய கட்சிகளை மிரட்டி பாஜக கூட்டணியிடம் வரவழைக்கவே!

2. பங்குச் சந்தையில் ஏற்றம் என்று காட்டி ஒருவகை 'மாயை' விளம்பரம் - பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த பாஜகவுக்கும். அமித் ஷாவின் வித்தைகளில் இதுவும் திட்டமிட்ட ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பது. அல்லது வேறு ஏதாவது உள்ளடி வேலைகளுக்கு இது முன்னோட்ட பிரச்சார உத்தியாகக்கூட இருக்கக்கூடும்!

நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவையில் 17 தொகுதிகளில் வாக்குப் பதிவு எண்ணிக்கையை விட கூடுதலான வாக்குகள் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவானது எப்படி? புகார் செய்தும் பயனில்லை.

மக்களின் கணிப்பு - ஆட்சியாளர் மீதுள்ள அதிருப்தி, வெறுப்பு என்று அரசுக்கு எதிரான மனநிலை இருக்கையில் முந்தைய இடங்களையோ, கூடுதல் இடங்களையோ அது பெறுவதென்றால், அதுவும் வியக்கத்தக்க வித்தையே" என, கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close