[X] Close

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம்: முதலாமாண்டு நினைவு தினத்தில் தூத்துக்குடி மக்கள் உறுதிமொழி


  • kamadenu
  • Posted: 22 May, 2019 11:14 am
  • அ+ அ-

-ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய அ.குமரெட்டியாரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த 13 பேர் புகைப்படங்கருக்கு கிராம மக்கள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் போராட்டம் நடைபெற்ற 13 கிராமங்களிலும் நினைவஞ்சலி செலுத்தினர்.

IMG-20190522-WA0002.jpg 

தூத்துக்குடி தனியார் ஹோட்டல் அரங்கில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக, மதிமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close