[X] Close

மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை: 100 நாள் செயற்திட்டத்தை தயார் செய்யவும் உத்தரவு


100

  • kamadenu
  • Posted: 22 May, 2019 10:59 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை மீண்டும் மோடி ஆட்சியே அமையும் எனத் தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்றிரவு முக்கிய அமைச்சரவைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக இத்தகைய கூட்டம் நடந்திருப்பது கவனம் பெறுகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தேசத்தின் பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்களை பிரதமர் கேட்டுப் பெற்றதாகத் தெரிகிறது.

மேலும், பல்வேறு முக்கிய இலாகாக்களும் அடுத்த 100 நாட்களுக்கான செயற்திட்டத்தை வகுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரதமர் மோடி தனது அமைச்சரவை அமைச்சர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நாளை மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close