[X] Close

சேலம் எட்டு வழிச்சாலை: முதல்வர் பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை; தினகரன்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:25 am
  • அ+ அ-

கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற முதல்வர் பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''புதிய சாலைகள் அமைப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மக்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது.

விபத்துகளைத் தவிர்ப்பது, எரிபொருளை மிச்சப்படுத்துவது மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியே சாலை மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. 100 சதவீதத்தில் 7 சதவீத மக்கள் தான் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நாட்டு நலனுக்காக அவர்கள் தங்கள் நிலங்களை வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வரின் கருத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது 'மக்களுக்கு உயிர் முக்கியம்; அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்' என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக 8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை. இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும்", என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close