[X] Close

‘எக்சிட்போல்’ கருத்து கணிப்பு அல்ல, திணிப்பு: முதல்வர் பழனிசாமி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 13:27 pm
  • அ+ அ-

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் என நிரூபணமானது போலத்தான் இப்போதும் நடக்கும் என்று முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

புதிய சாலைகள் அமைப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட  பணிகள், மக்களின் நன்மைக்காக செய்யப்படுகிறது. விபத்துகளை தவிர்ப்பது, எரிபொருளை மிச்சப்படுத்துவது மற்றும் வளர்ச்சியை மையப்படுத்தியே சாலை மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

போதிய மழை இல்லாததால் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 39 மக்களவை தொகுதிகளிலும் வெற்றிபெறும். சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளை வெளிப்படுத்தியிருப்பது அவை கருத்து திணிப்புகள்.

2016-ல் இதே ஊடகங்கள் அதிமுக தோல்வி அடையும் என்று கூறினீர்கள், நானே தோல்வி அடைவேன் என்றுத்தான் போட்டீர்கள் ஆனால் நான் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். ஆகவே இது கருத்து திணிப்பு.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருப்பது பற்றி  சொல்லவில்லை தமிழகத்தைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். எனக்கு தமிழகத்தை பொருத்தவரை மட்டுமே தெரியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close