[X] Close

4 தொகுதி தேர்தல்; 1 மணி நிலவரம்: அரவக்குறிச்சியில் அதிகமான வாக்குப்பதிவு


4-1

  • kamadenu
  • Posted: 19 May, 2019 14:51 pm
  • அ+ அ-

4 தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது.

தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்து முடிந்தது. உறுப்பினர்கள் மறைவு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக காலியாக இருந்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் முழுவீச்சில் நடைபெற்றது. தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பாக பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்பதால் 4 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் பிரச்சாரம் முடிவடைந்தது.

இதையடுத்து, 4 தொகுதிகளுக்கு உட்பட்ட 1,128 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் ஒரு மணிநேர வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:

அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 4 தொகுதிகளில் அரவக்குறிச்சியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருகிறது. 4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி, பதிவான வாக்குப்பதிவு சராசரியாக 47% வாக்குகள் பதிவாகி உள்ளது.

சூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 52.68%, திருப்பரங்குன்றம் - 47.09%, ஒட்டப்பிடாரம் - 45.06% வாக்குகள் பதிவாகி உள்ளது. மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் 1 மணி நிலவரப்படி 51.21% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close