[X] Close

4 தொகுதி இடைத்ததேர்தல்; வாக்காளர்களுக்கு திமுக பிரியாணி: அதிமுக புகார்


4

  • kamadenu
  • Posted: 19 May, 2019 14:19 pm
  • அ+ அ-

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து விநியோகிக்க இருப்பதாக அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

மீது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக செய்திப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்காக வாக்காளர்களுக்கு பிரியாணி தயார் செய்து விநியோகிக்க உள்ளனர்.

இதற்காக அதிக அளவில் இறைச்சி மற்றும் காய்கறிகள் வாங்கி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் பொட்டலங்கள் விநியோகிக்க உள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close