[X] Close

சென்னையில் 6 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது


6

  • kamadenu
  • Posted: 18 May, 2019 16:17 pm
  • அ+ அ-

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவொற்றியூரைச் சேர்ந்த அகில் (24), கணேஷ் (24), கார்த்திக் (24) ஆகிய மூவர் மீது H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும்,

புளியந்தோப்பைச் சேர்ந்த ரூபன் (31), வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெகன் என்கிற கருப்பு ஜெகன் (28) ஆகிய இருவர் மீது P-4 பேசின் பாலம் காவல் நிலையத்திலும், பட்டாபிராமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற பில்லா (23) மீது T-9 பட்டாபிராம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குற்றவாளிகள் 6 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்படி 6 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்றுஉத்தரவிட்டார். அதன்பேரில் குற்றவாளிகள் 6 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் அகில், கணேஷ், கார்த்திக் (எ) கேட் கார்த்திக் ஆகிய மூவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.  இதில் கார்த்திக் (எ) கேட் கார்த்திக் ஏற்கெனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரூபன், ஜெகன் (எ) கருப்பு ஜெகன் ஆகிய இருவர் மீதும் கொலை,  கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. சுரேஷ் (எ) பில்லா மீது அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ஏற்கெனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close