[X] Close

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் கோலாகலம்: பால்குடம் எடுத்து பக்தர்கள் பரவசம்


  • kamadenu
  • Posted: 18 May, 2019 14:53 pm
  • அ+ அ-

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 7-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.

தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  அதனையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

இந்நிலையில் இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் சண்முகர், தெய்வானை, வள்ளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சண்முகர், தெய்வானை, வள்ளிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி  மதுரை சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து வேண்டுதல் செய்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வந்தனர். 

மற்ற பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பறவைக்காவடிகள் எடுத்தும் வாயில், நாக்கில் அலகுகள் குத்தியும் காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close