[X] Close

சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 10:48 am
  • அ+ அ-

நாளை நடைபெற உள்ள சூலூர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், சூலூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யுமாறு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இன்று மனு அனுப்பினார். மேலும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவையும் நேரில் சந்தித்து அம்மனுவின் நகலை சமர்ப்பித்தார்.

அம்மனுவில், சூலூர் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்சே குறித்து அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் கூறிய கருத்து ஏற்கெனவே சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி கோரப்பட்டிருந்தும் அற்பமான காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close