[X] Close

ஒபிஎஸ் மகன் எம்.பி என கல்வெட்டு: சர்ச்சை ஏற்பட்டதையடுத்து மறைப்பு


  • kamadenu
  • Posted: 17 May, 2019 15:06 pm
  • அ+ அ-

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எம்.பி என போட்டு திறக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து  மறைக்கப்பட்டது.

தேனி மக்களவைத் தொகுதிக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், மதுரைக்கு ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கட்சிக்குள் வாரிசு அரசியல் என சர்ச்சை எழுந்தது. கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளும் விசுவாசிகளும் இருக்க வாரிசை களம் இறக்கியது குறித்து பரவலாக முணுமுணுப்பு எழுந்தது.

ஆனால் தமிழகத்திலேயே தேனியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் அதிமுகவினர் பணியாற்றினர். ஓபிஎஸ் மகனை எதிர்த்து அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வனும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் நின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தங்கத்தமிழ் செல்வனும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

தனது மகனுக்காக பிரதமர் மோடியையே தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வந்தார் ஒபிஎஸ். மேலும். வாரணாசிக்கு நேரடியாக ஓபிஎஸ் சென்றதை, தனது மகனுக்காக ஓபிஎஸ் சென்றார், அவர் பாஜகவில் சேரப்போகிறார் என் தங்கத்தமிழ்ச்செல்வன் விமர்சித்தார்.

அதன்பின்னரும் வாக்குப்பெட்டிகள் தேனிக்கு கொண்டுவரப்பட்டது, சில வாக்குச்சாவடிகள் மறுவாக்குப்பதிவு என சர்ச்சை தொடர்ந்து வரத்தான் செய்தது. 

இந்நிலையில் நேற்று தேனி அருகே குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் கல்வெட்டு ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும்  ரவீந்திரநாத்குமார் பெயர் இருந்தது. இதில் தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்னரே ரவீந்திரநாத் பெயருக்கு பின்னால் எம்.பி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கெனவே வெற்றிக்காக பல்வேறு உள்ளடி வேலைகளை செய்து வருகிறார் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில் வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே எம்.பி என்று அடையாளப்படுத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கல்வெட்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பரப்பப்பட்டு வைரலானது. விமர்சனமும் எழுந்தது. இதைய கல்வெட்டில் எம்.பி. என பெயர் இருந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மறைக்கப்பட்டது.

ஏற்கனவே இருந்த கல்வெட்டில் மற்றொரு கல்வெட்டு வைக்கப்பட்டு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close