[X] Close

நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் உச்சம்: அனல் வீசுவதால் மக்கள் அவதி


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:39 am
  • அ+ அ-

திருநெல்வேலியில் கடந்த 2 மாதங்களாகவே சுட்டெரிக்கும் வெயிலால் வறட்சி தாண்டவமாடும் நிலையில், தற்போது அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு பகல் நேரத்தில் அனல் அடிப்பதால் மக்கள் அவதியுறுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத் திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. தொடர்ந்து வெப்பம் தகித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திர வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது.

106 டிகிரி வெயில்

கடந்த சில நாட்களாக திருநெல் வேலி, பாளையங்கோட்டையில் பகல் நேர வெப்பநிலை 104 முதல் 106 டிகிரி பாரன்ஹீட்டை தொட் டுள்ளது. பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. அனல் காற்றும் வீசுகிறது. பேருந்துகளில் பயணம் செய் வோர் புழுக்கத்தால் அவதியுறு கிறார்கள். அக்னி நட்சத்திரம் வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும். இதனால், வெப்பநிலை இதே அளவுக்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித் துள்ள நிலையில் குளிர்பான கடை கள், சாலையோர இளநீர், நுங்கு, தர்ப்பூசணி பழ கடைகளை பாதசாரி களும், பயணிகளும் மொய்க் கிறார்கள்.

நீர்மட்டம் சரிவு

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 9.30 அடியாகிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும் வறட்சியால் அணைக்கு நீர்வரத்து அறவே இல்லாத நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 29.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தாகம் தணிக்கும் மணிமுத்தாறு

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 68.06 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 8 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக் காக 275 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. தற்போது, மணி முத்தாறு அணைதான் திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் தாகம் தணித்துக் கொண் டிருக்கிறது. அந்த அணையிலும் நீர்மட்டம் சரிய தொடங்கி யிருக்கிறது.

ஜூன் முதல் வாரத்தில்தான் பருவமழை கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், இன்னும் 3 வாரங்களுக்குமேல் மணிமுத்தாறு அணை தண்ணீரை குடிநீருக்கு நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

சகதி மட்டுமே மிச்சம்

மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 அணைகளில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, அடவிநயினார் கோயில் அணை களில் வெறும் சகதி மட்டுமே காணப்படுவதாக பொதுப்பணித் துறை தெரிவித்திருக்கிறது.

தற்போதுள்ள நிலவரப்படி மணி முத்தாறு அணையில் மட்டும் 26.81 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

பாபநாசம் அணையில் 1.19 சத வீதம், சேர்வலாறு அணையில் 7.93 சதவீதம், வடக்கு பச்சையாறு அணையில் 0.5 சதவீதம், நம்பியாறு அணையில் 16.79 சதவீதம், கொடு முடியாறு அணையில் 1.32 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அணைகளின் தற்போதைய நீர் இருப்பு நிலவரம் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் சிவகிரியில் தலா 2 மி.மீ., சேரன்மகாதேவியில் 1.40 மி.மீ. என்று கோடை மழை பதிவாகியிருந்தது.குடிநீர் பற்றாக்குறை

கோடையின் உக்கிரத்தை அடுத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் குடிநீர் பற்றாக்குறை தலைதூக்கியிருக்கிறது. மாவட்டத்தில் சங்கரன்கோவில், ராதாபுரம், பணகுடி பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

திருநெல்வேலியில் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சங்கரன்கோவிலில் பல இடங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close