[X] Close

பொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 09:18 am
  • அ+ அ-

பொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் பா.சரவணனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விரகனூர் பகுதியில் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி சாதாரண அரசியல்வாதியைப்போல் பொய் பேசி வருகிறார். அவரிடம் ஆற்றல், செயல்பாடு இல்லாமல் இருக்கலாம். அதற்காகப் பொய் பேசலாமா?. பொய் பேசுவதில் மோடிக்கு இணையாக யாரும் இல்லை.

ஏழைகளைக் கவரவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் டீ விற்றவன் என்றார். ஆனால் மோடி டீ விற்றதை நான் பார்த்ததே இல்லை என அவரது 24 ஆண்டு கால நண்பர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் ஆரம்பம் முதலே மோடி பொய் பேசி வருகிறார்.

1987-ல் அத்வானி பேரணி நடத்தியபோது டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுத்து அதை இ-மெயிலில் அவருக்கு அனுப்பினேன் எனப் பத்திரிகை யாளர் சந்திப்பில் மோடி பேசியுள் ளார். ஆனால் இந்தியாவில் 1995-ல் தான் இ-மெயில் அறிமுகமானது. அதேபோல் ஜப்பானைச் சேர்ந்த நிகான் நிறுவனம் டிஜிட்டல் கேமராவை 1990-ல் வெளியிட்டதாகக் கூறியுள்ளன. இவ்வாறு அப்பட்டமான பொய்களை சொல்லியிருக்கிறார்.

அவர் மே 23-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார். நாம் ஆதரிக்கும் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. அதேபோல், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு திருப்பரங்குன்றம் தொகுதி முக்கியம்.

இத்தொகுதி வேட்பாளர் சரவணனை வெற்றி பெறச் செய்யுங்கள். திமுக ஆட்சிக்குப்பின் மேலஅனுப்பானடி பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். செயல்படாமல் உள்ள கழிவு நீரேற்றும் நிலையம் சரி செய்யப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், பூங்கா அமைக்கப்படும். அப்பளத் தொழில், சில்வர் பட்டறை தொழில் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து மேல அனுப்பானடி, வில்லாபுரம், வலை யங்குளம் ஆகிய இடங்களிலும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close