[X] Close

ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தின் விசாரணையை நாங்கள் தாமதப்படுத்தவில்லை: அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி தகவல்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:01 am
  • அ+ அ-

முதல்வர் ஜெயலலிதா மரணம்தொடர்பாக விசாரித்து வரும்நீதிபதி ஆறுமுசாமி ஆணையத்தின் விசாரணையை நாங்கள்தாமதப்படுத்தவில்லை என்று அப்போலோ மருத்துவமனைகள் குழும செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்தார்.

எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த 36 வயது செவிலியருக்கு சென்னையில் உள்ள அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் மையத்தில் நாட்டிலே முதன்முறையாக முழுமையான எலும்பு மஜ்ஜை கதிரியக்க சிகிச்சை அளித்து சாதனைநிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குபிரதாப் சி.ரெட்டி மருத்துவர்கள் குழுவுடன் பேட்டி அளித்தார்.

அதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆணையம் தொடர்பாகஅவர் கூறியதாவது: முதல்வர்ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் சிறப்பாக அளிக்கப்பட்டன. நானும் நான்குவாரங்கள் உடனிருந்து அவருக்குஅளிக்கப்பட்ட சிகிச்சைகளை மேற்பார்வையிட்டேன். முடிந்தவரை அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து எங்கள் மருத்துவர்கள் கூறியதையும், நாங்கள் வழங்கிய மருத்துவ ஆவணங்களையும் தமிழில் மொழி பெயர்த்தபோது சில வார்த்தைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. அதனால் மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் குழுவே இதனைக் கையாள வேண்டும். அதற்காக மருத்துவ நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்துள்ளது. நாங்கள் எந்தவிதத்திலும் ஆணையவிசாரணையை தாமதப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்பலோ மருத்துவமனைகள் குழுமத் துணைத்தலைவர் டாக்டர் ப்ரீத்தாரெட்டியும் அப்போது உடனிருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close