[X] Close

ஊரைவிட்டு ஓடியவர் டிடிவி தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 13:04 pm
  • அ+ அ-

டிடிவி தினகரனுக்கு எம்பி பதவியை கொடுத்தது, தான் வாழ்நாளில் செய்த தவறு என கருதி,  வீட்டுப் பக்கமே அவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா சேர்க்காமல் இருந்தார். என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் ஆட்சியை ஜெயலலிதா கலைத்ததாக, சமீபத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"டிடிவி தினகரனின் பேச்சை அதிமுகவின் உண்மையான தொண்டர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மீது பக்திக் கொண்ட யாரும் ஏற்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவையே குற்றம் சொல்லும் அளவுக்கு டிடிவி தினகரன் சென்றிருக்கிறார். ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் அவரை குற்றம் சொல்கிறார். இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

10 ஆண்டுகள் ஊரை விட்டு ஓடியவர் தினகரன். தமிழ்நாட்டுக்கு வராமல், நாடாளுமன்றம் செல்லாமல் இருந்தவர். அவருக்கு எம்பி பதவியை கொடுத்தது, தான் வாழ்நாளில் செய்த தவறு என கருதி, வீட்டுப் பக்கமே அவரை ஜெயலலிதா சேர்க்காமல் இருந்தார்.

அவருக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் ஜெயலலிதாவையே அவர் குறை சொல்கிறார். இதுதான் தினகரனின் சுயரூபம்", என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close