[X] Close

காதலிக்க வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை: 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது


16-2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 08:49 am
  • அ+ அ-

திருப்பூரில் காதலிக்க வற்புறுத்தியதால் 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, 16 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

 இதுகுறித்து போலீஸார் கூறும்போது, 'திருப்பூர் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவரது வீட்டின் அருகே 17 வயது சிறுமி, தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.

நட்பு ரீதியில் மணிகண்டன் வீட்டுக்கு, சிவசக்தி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, மேற்கண்ட சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சிறுவனுடன் பழகுவதை சிறுமி நிறுத்திக் கொண்டார்.

இதனால் அதிருப்தியடைந்த சிறுவன், தன்னை காதலிக்குமாறு சிறுமியிடன் தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனால், சிறுமி மன பாதிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், நடந்த விவரங்களை நேற்று முன்தினம் மணிகண்டனிடம் கூறி, அவரை வைத்து சிறுமியிடம் பேசியுள்ளார். மேற்கண்ட சிறுவனை காதலிக்குமாறு, சிறுமியை மணிகண்டனும் வற்புறுத்தியாகக் கூறப்படுகிறது.

இதனால், மேலும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, வீட்டில் சாணிப் பவுடரைக் குடித்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு பொது இடத்தில் அவதூறான வார்த்தைகளில் பேசுதல், தற்கொலைக்கு காரணமாக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்' என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close