[X] Close

2 பல்கேரியர்கள் கைதான விவகாரம்: வெளிநாட்டு மோசடி கும்பல் சென்னையில் பதுங்கலா?- தனிப்படையினர் தீவிர விசாரணை


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:26 am
  • அ+ அ-

டெபிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட பல்கேரியா நாட்டினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு மோசடி கும்பல் சென்னையில் பதுங்கி உள்ளதா என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டெபிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட பல்கேரியாவைச் சேர்ந்த 2 பேரை, செம்மஞ்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 8-ம் தேதி கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் பல்கேரி யாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களின் ரகசிய எண்கள் உள்ளிட்ட தகவல்களை திருடி, அதன்மூலம் போலி டெபிட் கார்டுகள் தயாரித்துள்ளனர். பின்னர், அவற்றை சென்னைக்கு கொண்டுவந்து, இங்கு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து இந்திய பணம் ரூ.10 லட்சம், 50 டெபிட் கார்டுகள், லேப்டாப், ஸ்கிம்மர் கருவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் நீதி மன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்களைப் பற்றிய விவரங்களை சர்வதேச போலீஸாரிடம் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு டெபிட் கார்டு மோசடி கும்பல் சென்னையில் வேறு எங்காவது தங்கியுள்ளதா? இவர்கள் இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை திருடியுள்ளனரா என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close