[X] Close

தூத்துக்குடியில் ஸ்டாலின் தங்கும் தனியார் விடுதியில் பறக்கும் படையினர் சோதனை: வாகனத்தை சோதனை செய்யவில்லை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 12:05 pm
  • அ+ அ-

-ரெ.ஜாய்சன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மறவன்மடம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் அரசியல் கட்சியினர் வாகனங்களில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

தங்கும் விடுதிக்குள் வந்த வாகனங்கள், விடுதியில் இருந்து வெளியே சென்ற அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. தங்கும் விடுதி வாசலில் வைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இன்று தூத்துக்குடி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விடுதியில் தான் ஓய்வு எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் தனது பிரச்சார வாகனத்தில் 10.45 மணிக்கு விடுதிக்குள் வந்தார். அவரது வாகனத்தையும், அவருடன் வந்த திமுகவினரின் வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனை செய்யவில்லை. ஸ்டாலின் வருவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக பறக்கும் படையினர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.

கட்டுப்பாட்டு அறைக்கு பணப் பட்டுவாடா செய்வதாக வந்த தகவலையடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close