[X] Close

சாலையோரம் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு: சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது


4

  • kamadenu
  • Posted: 13 May, 2019 17:44 pm
  • அ+ அ-

சென்னையில் சாலையோரம் நடந்து செல்பவர்களிடம் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன், செல்போன் வியாபாரிகள் இருவர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையில் தொடர் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்புகள் அதிகரித்ததை அடுத்து காவல் ஆணையர் முன் முயற்சியில் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டன. இதையடுத்து சிசிடிவி காட்சிப் பதிவு அடிப்படையில் செயின் பறிப்போர், செல்போன் பறிப்போர் எளிதில் சிக்கினர்.

இதனால் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறைந்தன. குற்றவாளிகளிடையே சிசிடிவி கேமரா இருக்கும் பயம் காரணமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்தது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் நடந்து வருகின்றன.

அண்மையில் சென்னை பாண்டிபஜாரில் சாலையோரம் நடந்து சென்றவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், செல்போனைப் பறித்துச் சென்றனர். ஒரு இடத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனைப் பறித்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி பதிவை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர். அவர்களில் ஒரு நபர் 17 வயதே ஆன சிறுவன். மற்றொருவர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் (எ) ரவி (19) என்பது தெரியவந்தது. இவர் மீது கேரளாவின் செயின் பறிப்பு வழக்கும் உள்ளது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சத்யா பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் ராஜாமுகமது, திருட்டு மொபைல்களைக் குற்றவாளிகளிடமிருந்து வாங்கி கடையில் விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டுவந்த ஹரிகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த வழிப்பறி செய்து விற்பனை செய்த 18 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close