[X] Close

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 16:38 pm
  • அ+ அ-

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும். அப்போது 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மழை பெய்யாத இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 84 டிகிரி ஃபாரன்ஹீட்டும் நிலவும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 4 செ.மீ., நாமக்கல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணியில் 3 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கயத்தாறில் 2 செ.மீ., சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, நீலகிரி மாவட்டம் உதகையில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close